அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ரூபெல்வ்- பிளிஸ்கோவா நான்காவது சுற்றுக்கு முன்னேற்றம்!

71

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிகளில், ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ் மற்றும் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ், பிரித்தானியாவின் டேன் எவண்ஸை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், ஹென்ரி ரூபெல்வ், 6-4, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, ரஷ்யாவின் வர்வரா கிராச்சேவாவுடன் மோதினார்.

இப்போட்டியில், கரோலினா பிளிஸ்கோவா, 6-4, 6-2 நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

SHARE