ஆக்ரோஷமான செயல்பாடு தொடரும்.. டோனியுடன் ஒப்பிட வேண்டாம்: கோஹ்லி பளீர்

306
டோனியுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று இந்திய அணியின் டெஸ்ட் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.சமீபத்தில் நடந்த அவுஸ்திரேலிய தொடரின் பாதியில் டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்தார்.இதனையடுத்து டெஸ்ட் அணித்தலைவராக கோஹ்லி அறிவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து டோனி போல கோஹ்லியால் சிறப்பான அணித்தலைவராக செயல்பட முடியுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக கோஹ்லி கூறுகையில், இளம் வயதிலேயே, மூத்த வீரர்கள் அடங்கிய அணியை அவர் வழிநடத்திய விதம் வியக்கத்தக்கது. அதற்கான உத்தியை அவர் அறிந்து வைத்திருந்தார்.

டோனியும், நானும் வித்தியாசமான குணம் கொண்டவர்கள். அவருடன் என்னை ஒப்பிட்டு பேச வேண்டாம்.

அணித்தலைவர் பதவியில் என் ஆக்ரோஷமான செயல்பாடு தொடரும். மற்றவர்களுக்காக என்னால் முழுமையாக மாற முடியாது என்று கூறியுள்ளார்.

SHARE