ஆசனப் பங்கீடு தொடர்பாக நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் வவுனியாவில் நடைபெறவுள்ளது.

141

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு குறித்து, நாளை வவுனியாவில் நடைபெறவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

tna-400-seithy1

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்களுக்கிடையில் ஏற்கனவே நடத்தப்பட்ட கூட்டத்தில், யாழ்ப்பாணம், திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களின் ஆசனப் பங்கீடு குறித்து இணக்கம் காணப்பட்டது.

எனினும் மட்டக்களப்பு , வன்னி மாவட்டங்களுக்கான ஆசனப் பங்கீடு தொடர்பாக இன்னமும் இணக்கம் ஏற்படவில்லை.

இந்நிலையிலேயே நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் வவுனியாவில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களின் ஆசனப்பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை, மற்றும் இந்தத் தேர்தலில் வெற்றி கொள்வதற்கான பரப்புரை வியூகங்கள் குறித்தும், ஆராயப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE