ஆசிய கிண்ண தொடர் : பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

24

 

ஆசிய கிண்ண தொடரில் இந்திய -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி 228 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டு இன்றைய மேலதிக நாளுக்கு மாற்றப்பட்டது.

இன்றும் மதியம் மழை பெய்ததன் காரணமாக போட்டி மாலை 4.40 மணிக்கே ஆரம்பமானது.

அபாரமான இணைப்பாட்டம்
இந்திய அணி சார்பில் கோலி மற்றும் ராகுல் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர்.இருவரும் சதம் கடந்து அசத்திய நிலையில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 356 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா 56,சுப்பமன் கில் 58, கோலி ஆட்டமிழக்காமல் 122, ராகுல் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களை பெற்றனர்.

பதிலுக்கு இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி குல்தீவ் யாதவின் சுழலில் சிக்கி சிதறியது.

பாகிஸ்தான் அணிசார்பில்
இதனால் 32 ஓவரில் 128 ஓட்டங்களையே பாகிஸ்தான் அணியால் பெற முடிந்தது. இதன்மூலம் இந்திய அணி 228 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணிசார்பில் சல்மான் மற்றும் இப்திகார் அகமட் இருவரும் தலா 23 ஓட்டங்களை பெற்றனர்.பகார் சமன் 27 ஓட்டங்களை பெற்றார். நசீம் ஷா மற்றும் ஹரிஸ் ரவூப் இருவரும் காயம் காரணமாக துடுப்பெடுத்தாட வரவில்லை.

பந்துவீச்சில் குல்தீவ் யாதவ் 5,பும்ரா ஹர்திக் பாண்டியா, மற்றும் தாகூர் மூவரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

 

SHARE