ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளன.ஆடவர் ஹாக்கி போட்டியில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தென்கொரிய அணியை எதிர்கொண்டது. இதில், 44-வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் அடித்த அபார கோலால் இந்திய அணி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.
மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் அணி மலேசியாவை எதிர்கொண்டது. கடுமையான போராட்டத்திற்குப் பிறகு 6-5 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியை உறுதி செய்தது.
வியாழக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில், தங்கப்பதக்கத்தை வெல்வதற்கு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு பழிவாங்க இந்திய அணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, இறுதிப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.