ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமை குறித்து மனித உரிமை பாதுகாவலர்கள் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லெர் கவலை வெளியிட்டுள்ளார்.
“மனித உரிமை பாதுகாவலர் ஜோசப் ஸ்டாலின் மாலை ஆறுமணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார் என்ற கவலை தரும் செய்தியை இலங்கையிலிருந்து கேள்விப்படுகின்றேன்.
ஜோசப்ஸ்டாலின் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் முன்னர் எப்போதையும் விட சமீபவாரங்களில் மிக முக்கியமானவையாக காணப்படுகின்றன,
அவற்றிற்கு ஆதரவளிக்கவேண்டும் – தண்டிக்ககூடாது” என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம்
நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்த போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மே மாதம் 28ஆம் திகதி நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.