ஆணாக நடித்து, 15 வயது சிறுமியை காதலித்து, கொண்டு ஓடிய யுவதி!

288
ஆணாக நடித்து, 15 வயது சிறுமியொருவரை காதலித்து, அவரை தன்னுடன் அழைத்து சென்ற 25 வயதான யுவதியொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் கட்டான பகுதியில் நடந்துள்ளது.

கட்டான, தமின்னகாவத்த பகுதியை சேர்ந்த அசங்கா என்ற இந்த 25 வயது யுவதி, நீண்டகாலமாக ஆணாக நடித்து வருகிறார். யாரும் அவரை இதுவரை சந்தேகித்திருக்கவில்லை. எந்த அடையாளமும் தெரியாமல் கச்சிதமாக ஆடைகள் அணிந்து வந்திருக்கிறார்.

இந்தநிலையில், 15 வயதான சிறுமியொருவரை சந்தித்து, இருவரும் காதலில் வீழ்ந்துள்ளனர். ஒரு வாலிபனை காதலிப்பதாக அந்த சிறுமி நினைத்திருந்தார்.

சிறுமியை விரைவில் திருமணம் செய்வதாக மாறுவேட காதலன் வாக்குறுதியளித்ததையும் சிறுமி நம்பியிருக்கிறார்.

சிலதினங்களின் முன்னர் சிறுமியை தன்னுடைய விடுதிக்கு அழைத்து சென்று தங்கவைத்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் அளித்த முறைப்பாட்டையடுத்து, பொலிசார் இருவரையும் கைது செய்தனர். சிறுமி சீரழிக்கப்பட்டுள்ளாரா என்பதை உறுதிசெய்த இருவரையும் வைத்தியப்பரிசோதனைக்கு அனுமதித்த சமயத்திலேயே இந்த அதிர்ச்சி உண்மை வெளிப்பட்டது.

யுவதி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

SHARE