ஆணாக வேடமிட்டு பெண்ணொருவரை திருமணம் செய்து, அவருடன் 8 வருடங்கள் குடும்பம் நடத்திய பெண்ணொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

331

ஆணாக வேடமிட்டு பெண்ணொருவரை திருமணம் செய்து, அவருடன் 8 வருடங்கள் குடும்பம் நடத்திய பெண்ணொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

30 வயதான இந்த பெண்ணின் உண்மையான பெயர் குசும் தசாநாயக்க எனவும் அவர் கசுன் தசநாயக்க என்று தனது பெயரை மாற்றி கொண்டு வெலிகம, உடுகாவ என்ற பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்துள்ளார்.

கணவராக வேடமிட்ட பெண், திருமணம் செய்து எட்டு வருடங்களாகியும் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்ததில்லை. இதனால் வெறுத்துப்போன மனைவி, அவரை வெறுத்து ஒதுக்கியுள்ளார்.

என்றாலும், அந்த வீட்டிலேயே தங்கியிருந்திருக்கிறார். இதனையடுத்து, பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். தன்னை உபசரிப்பதில்லையென அவர் முறையிட்டுள்ளார்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் குட்டு அம்பலமானது. ஆணாக தன்னை வெளிக்காட்டிக்கொண்ட பெண் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண்ணுக்கு எதிராக மோசடியான ஆவணங்களை தயாரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெண் மாத்தறை பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.sisters

SHARE