ஆணுறை இயந்திரங்கள் : மீண்டும் ஆரம்பிக்கப்படும் நடைமுறை

49

 

பொது இடங்களில் ஆணுறை விற்பனை இயந்திரங்களை நிறுவும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று தேசிய பாலியல் பரவும் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புத் திட்டம் தெரிவித்துள்ளது.

எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும் வகையில் இத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் ஜானகி வித்யாபத்திரன தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு முதல், இந்த ஆணுறை விற்பனை இயந்திரம் ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு அருகில் நிறுவப்பட்டது.

பொருளாதார நெருக்கடி
ஆனால், கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது.

இந் நிலையில், மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் முதல் நவம்பர் வரை ஆணுறைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது, கடந்த வாரம் 20 லட்சம் ஆணுறைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, தற்போது மருத்துவமனைகளுக்கு வரும் மக்களுக்கு இந்த ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE