ஆண்ட்ராய்டு Smartphone பயன்படுத்துபவரா? உங்கள் பணத்தை திருடும் புதிய வைரஸ் இதுதான்

99

 

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தொழிநுட்பம் வளர வளர அதன் மூலம் ஏற்படும் ஆபத்துகளும் அதிகரிக்கின்றன.

அதாவது புதிது புதிதாக வைரஸ்களை உருவாக்கி பரப்புவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடக்கிறது.

அந்த வகையில் SOVA என்கிற ட்ரோஜன் வைரஸ் தற்போது உலகெங்கிலும் பரப்பப்படுகிறது.

இந்த SOVA வைரஸ் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் எளிதில் நுழைந்து நம்முடைய மொபைலை ஹேக் செய்துவிடக் கூடியதாக இருக்கிறது. இது ஒருமுறை மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுவிட்டால் அதை நீக்குவது கடினம் என கூறப்படுகிறது.

இந்த வைரஸ் நம்முடைய மொபைலிலிருந்து பெயர், பாஸ்வேர்ட், நம்முடைய இணைய தேடல்களின் குக்கீஸ், செயலிகளின் விவரங்கள் போன்றவற்றை திருடிவிடுமாம்.

இந்த வைரஸ் அதிகாரபூர்வ வங்கி, மற்றும் பிற செயலிகள் போலவே தன்னுடைய வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படும் நிலையில் அதன் மூலம் நமது பணம் திருடப்படும்.

SOVA வைரஸ் தாக்காமல் தடுப்பது எப்படி?

பிளேஸ்டோரிலிருந்து செயலிகளை இன்ஸ்டால் செய்யும்போது அதன் நம்பகத்தன்மையை சோதிக்க வேண்டும்.

தேவையில்லாத செயலிகளை இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.செயலிகளை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். மொபைலை 3 மாதத்துக்கு ஒருமுறை ரீசெட் செய்யலாம்.வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமுக வலைதளங்கள் மற்றும் எஸ் எம் எஸ் மூலமாக வரக்கூடிய எந்த லிங்கையும் முழுமையாகப் படித்து பார்க்காமல் க்ளிக் செய்ய வேண்டாம்.

SHARE