ஆண்ட்ரியா விருது கனவில் உள்ளார்.

184


ரண்டு மூன்று நாயகிகளில் ஒருவராகவே நடித்து வந்த ஆண்ட்ரியாவிற்கு அரண்மனை படம் வெளியான பிறகு சிங்கிள் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ள கதைகளும் கிடைத்து வருகிறதாம். தற்போது இயக்குநர் ராம் இயக்கும் தரமணி படத்தில் நடித்துவரும் ஆண்ட்ரியாவை பக்கா பர்பார்மென்ஸ் நடிகையாக மாற்றியிருக்கிறாராம் ராம். அதோடு இப்படத்தி ப்ரோமோஷனுக்காக ராம் ஆண்ட்ரியாவே எழுதி இசையமைத்து பாடியுள்ள பாடலையே பயன்படுத்துவதால் உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருக்கிறாராம் ஆண்ட்ரியா. இதற்கு முன்பு ராம் இயக்கிய தங்க மீன்கள் பல விருதுகளைப் பெற்றது போல் இப்படமும் விருதுகளை பெறவேண்டும் என்ற முனைப்போடு தரமணி படத்தை இயக்கி வருவதோடு ஆண்டிரியாவை நடிப்புத்திறனை வித்தியாசமான கோணத்தில் வெளிப்படித்தியிருப்பதால் இதுவரை விருதுகளைப் பற்றியெல்லாம் சற்றும் யோசிக்காத ஆண்ட்ரியா தரமணி படத்தின் மூலம் தனக்கு ஏதாவது ஒரு வகையில் விருதுகள் கிடைக்குமென்றும் விருது கனவில் மிதந்து கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா.

SHARE