ஆண் சிசுவின் சடலம் மீட்பு

134

 

 

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா ஆற்றிற்கு அருகாமையில் உள்ள நோர்வூட் அயரபி தோட்டப்பகுதியில் தேயிலை பகுதியில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று 20.08.2015 அன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

unnamed (2) unnamed (4) unnamed (5) unnamed

அப்பகுதிக்கு சென்ற பிரதேசவாசிகள் சிலர் சிசுவின் சடலத்தை கண்டு நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

 

அதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் சிசுவை மீட்டுள்ளனர்.

 

தாய் சிசுவை பிரசவித்தவுடேனே இவ்வாறு தேயிலைப்பகுதியில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 

சிசுவின் சடலம் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

அத்தோடு சிசுவை பிரசவித்த தாயை தேடி இணங்கண்டு கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE