ஆபத்தான விபத்தில் சிக்கி மயிரிழையில் சேதமின்றி உயிர் தப்பிய நபர்

11

 

ஒன்றாரியோவில் மிக ஆபத்தான வாகன விபத்து ஒன்றில் சிக்கிய கனேடியர் ஒருவர் எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.

47 வயதான சயிட் உசெய்ன் என்ற சாரதியே இவ்வாறு அதிசயமாக உயிர் பிழைத்துள்ளார்.

சயிட் பயணம் செய்த கார், பாரிய குப்பை வண்டியொன்றில் மோதுண்டு அரை கிலோ மீற்றர் தூரத்திற்கு மேல் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், எவ்வித காயங்களும் அவருக்கு ஏற்படவில்லை.

பாரிய குப்பை வண்டியில் கார் மோதுண்டு இழுபட்டு செல்வதனை குப்பை வண்டி சாரதி அறிந்திருக்கவில்லைல எனவும், ஏனைய வாகனங்களில் பயணம் செய்தவர்கள் ஹோர்ன் ஒலி எழுப்பி சாரதிக்கு சம்பவம் தொடர்பில் அறியத் தந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

401 அதிவேக நெடுஞ்சாலையில் இந்த வாகன விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.

கடவுள் தமக்கு புதிய வாழ்க்கையை தந்துள்ளதாகவும் அதனையிட்டு மிகுந்த மகிழ்ச்சி கொள்வதாகவும் சயிட் தெரிவித்துள்ளார்.

SHARE