ஆபத்து நிறைந்த காட்டில் 12 நாட்களாக தவித்த சிறுமி (வீடியோ இணைப்பு)

215
ரஷ்யாவில் சைபீரிய காட்டுப்பகுதியில் 12 நாட்கள் தனது நாயின் துணையோடு உயிர் வாழ்ந்த சிறுமி மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரஷ்யாவின் யகுட்டியா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி கரினா சிகிட்டோவா.இவர் காட்டுக்கு சென்ற தனது தந்தையை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

பின்னர் வழி மறந்த அவர் கடுமையான குளிர் நிறைந்த, ஆபத்தான கரடிகள் மற்றும் ஓநாய்கள் நிறைந்த அந்த காட்டிலேயே ஒரு புதரின் உள் சென்று அமர்ந்து கொண்டார்.

தாகம் எடுக்கும்போது அருகில் உள்ள நீர்நிலையில் சென்று தாகத்தை தணித்துகொண்டாள்.

மேலும் அந்த ஆபத்தான காட்டில் அவரது நாய் மட்டுமே அவருக்கு துணையாக இருந்துள்ளது.

பின்னர் 9 நாள் கழித்து கிராமத்தினருக்கு தகவல் தெரிவிப்பதற்காக நாய் அங்கிருந்து சென்றுவிட்டது.

இதையடுத்து காணாமல் போன 12 நாட்களுக்கு பின்னர் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

மீட்கும்போதுகூட சிறுமி பயப்படாமல் தைரியமாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

SHARE