ஆப்கானிஸ்தான்: தற்கொலை தாக்குதல்களில் 35 பலி – நூற்றுக்கணக்கானவர்கள் காயம்

229
நேற்று ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட இரட்டைத் தற்கொலை தாக்குதல்களில் சம்பவங்களில் 35 பேர் உயிரிழந்தனர். 240 பேர் காயமடைந்தனர்.

தலைநகர் காபூலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஷா ஷாஹீத் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை காலையில் வெடிபொருள் நிரப்பப்பட்ட லாரியை தீவிரவாதிகள் மோதி வெடிக்கச் செய்தனர். இதில் 15 பேர் உயிரிழந்தனர். 240 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் நடந்து 24 மணி நேரம் முடிவதற்குள்ளாகவே, காபூல் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள காவல்துறை அகாடமிக்கு போலீஸ் உடை அணிந்து வந்த தீவிரவாதி தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் காவலர் பணித் தேர்வுக்கு வந்திருந்த 20 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

SHARE