ஆயிரக் கணக்கான படைவீரர்களின் அர்ப்பணிப்புடனேயே இந்த நாடு பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்டது. புலம்பெயர் தமிழர்களும், வெளிநாட்டு சக்தகிளும் இந்த நாட்டை கட்டுப்படுத்த இடமளிக்க முடியாது-!- நாமல்

415

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அவசர தீர்மானங்கள் காரணமாகவே நாம் இன்று சுதந்திரமான முறையில் வாழ்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
magi-son

இந்த நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான அரச தலைவர்கள் அன்று ஒழித்தே இருந்தார்கள்.

நாம் ஒரு பக்கம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த போதுää மறு புறத்தில் முன்னாள் தலைவர்கள் தலைவிகள் நாட்டை காட்டிக் கொடுத்தார்கள்.

போரின் 75 வீதத்தை முடித்து விட்டதாக கூறும் தலைவியர் உண்மையில் 75 வீதமான போரை விட்டுச் சென்றிருந்தனர்.

நாடு அபிவிருத்திப் பாதையில் நகர்கின்றது. பாதைகள் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

அன்பார்ந்த தம்பி தங்கைகளுக்காக பாடசாலைகள் நிர்மாணிக்கப்படுகின்றன.

நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி நாட்டு மக்கள் மீதும் நாடு மீதும் நேசம் கொண்டுள்ளார்.

ஆயிரக் கணக்கான படைவீரர்களின் அர்ப்பணிப்புடனேயே இந்த நாடு பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்டது.

புலம்பெயர் தமிழர்களும், வெளிநாட்டு சக்தகிளும் இந்த நாட்டை கட்டுப்படுத்த இடமளிக்க முடியாது.

வாழ்வதற்கு நாடு ஒன்று இருக்க வேண்டும். தியாகத்துடன் மீட்கப்பட்ட நாட்டை மீண்டும் பிளவடையச் செய்ய அனுமதிக்க முடியாது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி வத்தேகம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் அண்மையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

– See more at: http://www.newstamilwin.com/show-RUmtyBTWKbmr7.html#sthash.WEgyKLVf.dpuf

SHARE