ஆரம்பப் பாடலுக்கே ரூ.5 கோடி…

340

நடிகர் விஜய் தற்போது சிம்புத்தேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 58ஆவது படமாகும். இதில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகாவும், ஸ்ருதிஹாசனும் நடித்து வருகின்றனர். மற்றும் பிரபு, ஸ்ரீதேவி, சுதீப், நந்திதா, சத்யன், கருணாஸ், தம்பி ராமையா, விஜயகுமார், ஆடுகளம் நரேன் என ஒரு பெரிய கூட்டமே நடித்து வருகிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார் நட்ராஜ். தமீன் மற்றும் பி.டி.செல்வகுமார் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறார்கள். புலி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆரில் பிரம்மாண்ட அரண்மனை செட்டை போட்டு அங்கு அரசர் கால கதையை படப்பிடித்தனர். பிறகு கேரளாவில் உள்ள மலைப் பகுதிகளில் மலை கிராமம் போன்று அழகான செட் போட்டு அங்கு படமாக்கினர். அதைத் தொடர்ந்து தற்போது இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள தலக்கோணம் பகுதியில் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ஆரம்பப் பாடலுக்காக 5 கோடி ரூபா செலவில் மிகப் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கி இருக்கிறார்கள். கலை இயக்குநர் முத்துராஜ் தலைமையில் 200 பணியாளர்கள் சுமார் இரண்டு மாதங்களாக பணியாற்றி பாடலுக்கான அரங்கை வடிவமைத்திருக்கிறார்கள். இப்பாடல் வித்தியாசமான ஒரு அனுபவத்தை ரசிகர்களுக்குத் தரும் என்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளர் நட்ராஜ். ‘புலி’ படப்பிடிப்பு ஏப்ரல் 29ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் திகதியும், படத்தை ஓகஸ்ட் 15ஆம் திகதியும் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே அதிக பொருள் செலவில் உருவாகி வரும் படம் ‘புலி’ என்பது குறிப்பிடத்தக்கது.

vvvv

 

 

SHARE