ஆர்யாவால் ரஜினியிடம் வசமாக மாட்டிய சந்தானம்

133

ஆர்யா, சந்தானம், தமன்னா நடித்துள்ள படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. ராஜேஷ் இயக்கும் இப்படத்தில் இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆர்யா, சந்தானம், இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் சந்தானம் பேசும்போது, “ராஜேஷ் முதலில் என்னிடம் படத்தின் தலைப்பு ‘வி.எஸ்.ஓ.பி’ என்று சொன்னார். சொன்னவுடனே இந்த படம் வெற்றி அடையும் என்று சொன்னேன்.

நானும் ஆர்யாவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். நான் சும்மா என்னுடைய ரசிகைகளிடம் தென்னிந்தியா காமெடி சூப்பர் ஸ்டார் என்று கூறினேன்.

அதை கேட்ட ஆர்யா, சேட்டை படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்துவிட்டார். அதன்பின்னர் ரஜினியுடன் நான் நடிக்கும் போது, அவர் என்னிடம், ‘என்ன… காமெடி சூப்பர் ஸ்டார் பட்டம் போட்டுட்ட?’ என்று கேட்டார்.

நான் உடனே, ‘சார் நான் காரணம் இல்ல, ஆர்யாதான் காரணம்’ என்று கூறினேன். அப்போது ஆர்யா-சந்தானம் கூட்டணி நல்லா இருக்கு என்று அவர் பாராட்டினார். இந்த படம் நல்லா இருக்கும். எல்லாருக்கும் பிடிக்கும்

SHARE