ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது ஸ்பெயின் அணி.

472
பிரேசிலில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் கடைசி லீக் போட்டிகள் நேற்று இரவு ஒரே நேரத்தில் நடைபெற்றன.குரிடியாவில் நடைபெற்ற சம்பிரதாய ஆட்டத்தில் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த அவுஸ்திரேலியா–ஸ்பெயின் அணிகள் சந்தித்தன.

நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி 3–0 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து ஆறுதல் வெற்றியுடன் தனது பிரிவில் மூன்றாவது இடத்தை பெற்று வெளியேறியது.

ஸ்பெயின் அணியில் டேவிட் வில்லா 36–வது நிமிடத்திலும், பெர்னாண்டோ டோராஸ் 69 நிமிடத்திலும், ஜூயன் மாடா 82–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

SHARE