மைத்திரியில் புதிய அரசாங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஆலோசனை சபை இன்று முதல் தடவையாக ஒன்றுகூடியுள்ளது.
இந்த ஆலோசனை சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சரத் பொன்சேகா, சம்பிக்க ரணவக்க, அனுர குமார திஸாநாயக்க, இரா. சம்பந்தன் மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
மைத்திரி ஆட்சிக்கு வந்தால் தேசிய ஆலோசனை சபை அமைக்கப்படும் என்றும், இவர்கள் அரசாங்கத்தை வழிநடாத்துவதற்கு ஆலோசனை வழங்குவார்கள் என்றும் தேர்தல் பிரசார காலங்களில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.