
பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும் சவாலாக அமைவார் என்று சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் சிறந்த ஒரு போட்டியாளரைத் தெரிவு செய்திருப்பதாக அவர் கூறுகிறார்.
நேற்றிரவு பி.பி.சி. சந்தேசயவுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரே குரலில் ஜனாதிபதியைத் தோற்கடிப்பதற்காக களமிறங்கியிருப்பதாகச் சொல்லும் அவர், முழுப் போராட்டத்துக்குச் செல்வதற்கு முன்னரேயே அது முடிந்துவிட்டது.
“பாரியதொரு வீழ்ச்சி, உடைவு, தோல்வியின் முன்கூட்டிய எதிர்வுகூறல்“ என்றுதான் இதனை குறிப்பிட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலுக்கான போராட்டம் 70 வீதமளவு முடிந்துவிட்டது. ஜனாதிபதி அனைத்து துரும்புகளையும் பயன்படுத்தி முடிந்து விட்டதாகவும், எதிர்க்கட்சி இப்போதுதான் ஆரம்பித்திருப்பதாகவும் விக்டர் ஐவன் குறிப்பிட்டுள்ளார்.