ஆளும் கட்சியில் இருந்து விலகி தனக்கு ஆதரவு வழங்க இணையும் தரப்பினரை எதிர்வரும் நாட்களில் காணமுடியும்- மைத்திரிபால

439

ஆளும் கட்சியில் இருந்து விலகி தனக்கு ஆதரவு வழங்க இணையும் தரப்பினரை எதிர்வரும் நாட்களில் காணமுடியும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று கண்டியில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணிகளை ஆரம்பிக்கும் முன்னதாக தலதா மாளிகையில் வழிப்பாட்டில் ஈடுபடவும் மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெறும் நோக்கில் கண்டிக்கு சென்றிருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் பணிகளை வெற்றிகரமான முறையில் மேற்கொள்ள நான் எதிர்பார்த்துள்ளேன்.

பொது வேட்பாளராக போட்டியிட நான் முன்வந்து கடந்த 72 மணிநேரத்தில் அரசியலில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

நான் எதிர்பார்த்ததை விட நாட்டு மக்களின் ஆசியும் ஆதரவும் கிடைத்துள்ளது. எனக்கு கிடைக்கும் தகவல்கள் என்னை ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளது. அந்தளவுக்கு நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

அதேபோல் நிதியானதும் நியாயமானதுமான தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அதேவேளை அனுராதபுரத்திற்கு இன்று மாலை செல்லும் மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ மஹாபோதி விகாரையில் வழிப்பாடுகளில் ஈடுபட உள்ளார்.

கண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, லக்ஷ்மன் கிரியெல்ல, அர்ஜூன ரணதுங்க, எம்.கே.டி.எஸ் குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

SHARE