ஆழ்கடல் கடற்றொழிலாளர்களின் உயிர்காக்கும் வகையிலான சுகாதார செயற்திட்டம்

31

 

கடற்றொழிலாளர்களின் உயிர்காக்கும் வகையிலான சுகாதார செயற்திட்டமொன்று அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

வென்னப்புவ, வெல்லமங்கரய கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து இன்று (26.02.2024) குறித்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி கடலுக்கு தொழிலுக்காக செல்லும்போது சுகவீனமடைவது, உயிரழிப்பது போன்றன கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனை
இந்நிலையில், கடற்றொழிலாளர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எவ்வாறு? நோய்வாய்ப்பட்ட சில கடற்றொழிலாளர்களை விரைவாக கரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் என்பன இந்த செயற்திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து கடற்றொழிலாளர்களுக்கும் முழுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

குறித்த மருத்துவ சான்றிதழ் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் எனவும், சம்பந்தப்பட்ட கடற்றொழிலாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவச் சான்றிதழைப் பெறவேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதக்படி துறையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து கடற்தொழிலாளர்களுக்கும் இந்த சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. அது குறித்த பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்குவதற்காக நாட்டின் அனைத்து துறைமுகங்களின் அருகிலும் அரசாங்க மருத்துவமனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

SHARE