ஆஸ்கர் விருதின் இறுதிப் பட்டியலுக்கு நாட்டுக் கூத்து பாடல்

12
ஆஸ்கர் விருதின் இறுதிப் பட்டியலுக்கு ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டுக் கூத்து பாடல் தேர்வாகியுள்ளது.
95 ஆவது ஆஸ்கா் விழா 2023 ஆம் ஆண்டு மாா்ச் 12 ஆம் திகதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறவுள்ளது.
இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இந்தத் திரைப்படம் ஆஸ்கா் விருதுக்கான பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பித்திருந்த நிலையில், ‘ஒரிஜினல் பாடல்’ என்ற விருதின் பிரிவில் 5 பாடல்களில் ஒன்றாக நாட்டுக் கூத்து பாடலும் இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது. ஆஸ்கர் கிடைக்க வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
SHARE