இக்கட்டான நிலையில் இந்தியா: இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து தவான் விலகல்

189
இலங்கை அணிக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் விலகியுள்ளார்.இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நிலையில், இந்திய அணி 63 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.இதன் முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய தவான் 134 ஓட்டங்கள் அடித்து அசத்தினார். முன்னதாக களத்தடுப்பில் ஈடுபடும் போது அவருக்கு உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது.

காயத்தை பொருட்படுத்தாமல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 2வது இன்னிங்சில் 28 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

இந்நிலையில் காயம் காரணமாக எஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்தும் விலகுவதாக தவான் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, காயம் காரணமாக முரளி விஜய் முதல் போட்டியில் விளையாடவில்லை.

தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள முரளிவிஜய் கொழும்பில் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பிருக்கிறது.

ஒருவேளை அவர் பங்கேற்றகவில்லை என்றால் தொடக்க வீரராக யாரை களமிறங்க வைக்கலாம் என்பது தொடர்பான பிரச்சனை அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு ஏற்படும்.

SHARE