இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.டொஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார வீச்சால் நியூசிலாந்து அணி திணறியது. 5 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்து தத்தளித்தது.
அதன்பின் லதம் – ரோஞ்சி ஜோடி சரிவில் இருந்து மீட்டது. லதம் 84 ரன்னும், ரோஞ்சி 88 ரன்னும் எடுத்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 297 ரன் எடுத்து இருந்தது.