இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு புதிய பயிற்சியாளர்.. நியூசிலாந்தின் மிரட்டல் வீரர் நியமனம்!

14

 

இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு நியூசிலாந்தின் முன்னாள் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதன் பின்னர் அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். மேலும், டெஸ்ட் மற்றும் white ball கிரிக்கெட்டுக்கு என தனித்தனியாக இரண்டு பயிற்சியாளரை நியமிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

டெஸ்ட் அணிக்கு நியூசிலாந்தின் முன்னாள் வீரரான பிரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார் என இங்கிலாந்து செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.

இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு புதிய பயிற்சியாளர்.. நியூசிலாந்தின் மிரட்டல் வீரர் நியமனம்!

இந்த நிலையில் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் தான் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும், மெக்கெல்லம் அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது பணியை தொடங்குவார் எனவும் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு புதிய பயிற்சியாளர்.. நியூசிலாந்தின் மிரட்டல் வீரர் நியமனம்!

இது தொடர்பாக பேசிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ராப் கீ கூறுகையில், ‘இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் தலைமை பயிற்சியாளராக பிரெண்டனை உறுதி செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவரைப் பற்றி அறிந்து கொள்வதும், விளையாட்டின் மீதான அவரது பார்வையைப் புரிந்துகொள்வதும் ஒரு உண்மையான பாக்கியம். அவரது நியமனம் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு நல்லதாக இருக்கும் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

SHARE