இடையழகியாக மாற போறீங்களா?

237

இர­க­சியம் என்­றாலே அனை­வ­ரும் அதை தெரிந்து கொள்ள அதிக ஆவல் காட்­டுவோம். அதில் தற்­போது பெரும்­பா­லானோர் தெரிந்து கொள்ள விரும்பும் ஒன்று மெல்லியதாக இருப்­ப­வர்கள் எப்­படி ஆரோக்­கி­ய­மாக இருக்­கி­றார்கள் என் ­பதுதான். அத்­துடன் மெல்லியதாக இருப்­ப­வர்கள் தங்­களை இறுக்­க­மா­கவும், சிக்­கென்றும் வைத்துக் கொள்­கி­றார்கள். பத்தே நாட்­களில் எடையை குறைக்க வேண்­டுமா? அப்படியானால் தண்ணீர் நன்­றாக குடிக்­கவும்.

மெல்லியதாக இருப்­ப­வர்கள் நன்கு சாப்­பி­டு­வார்கள். ஆனால் அதே சமயம் அவர்கள் நீரை அதிகம் குடிப்­ப­தோடு, உடற்­ப­யிற்சி, விளை­யாட்டு போன்­ற­வ ற்றில் ஈடு­ப ட்டு எப்­போதும் சுறு­சு­றுப்­புடன் இருப்­பார்கள். அது­மட்­டு­மின்றி, அவர்கள் நன்கு சாப்­பிட்­டாலும், நீரை அதிக அளவில் குடிப்­பதால், அவர்­களின் உடலில் தங்­கி­யுள்ள நச்சுக்கள் வெளி­யேறி உட­லா­னது ஆரோக்­கி­ய­மாக இருக்கும். குண்­டாக இருந்து மெலிய நினைத்தால், மெலிந்­த­வர்­களின் டயட்டை பின்­பற்­றவும்.

தண்ணீர் அதிகம் குடிக்­கவும்

நீங்கள் மெல்லியதாக இருக்க வேண்­டு­மானால், தினமும் குறைந்­தது 3 லீட்டர் தண்­ணீர் குடிக்க வேண்டும். இதனால் உட லில் தங்­கி­யுள்ள நச்­சுக்­க­ளா­னது உடலில் இருந்து வெளி­யேறி, உடலை ஆரோக்­கி­ய­மா­கவும், சுறு­சு­றுப்­பு­டனும் வைத்துக் கொள்ள உதவும்.

பழங்­களை சாப்பாட்டில் சேர்க்­கவும்

உடலை ஆரோக்­கி­ய­மா­கவும், மெல்லி யதாகவும் வைத்துக் கொள்ள சாப்பாட்டில் பழங்­களை அதிகம் சேர்த்து வர வேண்டும். இது உடலில் தங்­கி­யுள்ள அதி­கப்­ப­டி­யான கொழுப்­புக்­களை கரைத்­து­விடும்.

கசப்­பான உண­வுகள் அவ­சியம்

மெல்லியதாக இருப்­ப­வர்கள் தங்கள் உணவில் அவ்­வப்­போது கசப்­பான உண­வு­க­ளையும் சேர்த்து வரு­வார்கள். இதனால் தான் அவர்­களின் உடலில் கொழுப்­புக்கள் தங்­கு­வ­தில்லை. மேலும், அவர்­க­ளை எவ்­வித நோயும் அவ்­வ­ளவு எளிதில் தாக்­கு­வ­தில்லை.

அள­வான உண­வுகள்

மெல்லியதாக இருப்­ப­வர்கள் ஆரோக்­கி ­ய­மாக இருக்க மற்­றொரு இரக­சியம் தான் அவர்கள் உண்ணும் உண­வின் அளவு. மெல்லியதாக இருப்­ப­வர்கள் எப்­போதும் அளவுக்கு அதி­க­மாக சாப்­பி­ட­மாட்­டார்கள். மேலும் சீரான இடை­வெ­ளியில் சாப்­பி­டு­வார்கள்.

பிடித்­ததில் ஆர்வம் காட்­டு­வார்கள்

வாழ்க்­கையில் நமக்கு பிடித்­ததை செய்­தாலே சந்­தோ­ஷ­மா­கவும், ஆரோக்­கி­ய­மா­கவும் இருக்­கலாம். அதிலும் மெல்லியதாக இருப்­ப­வர்கள் நேரம் கிடைக்கும் போது ஏதேனும் ஒரு விளை­யாட்டு, நடனம் அல்­லது உடற்­ப­யிற்சி போன்­ற­வற்றில் ஈடு­பட்டுக் கொண்டே இருப்­பார்கள். இதனால் அவர்­களின் உடலில் கொழுப்­புக் கள் தங்­குவ­தில்லை.

நன்கு தூங்க வேண்டும்

இரவில் சரி­யாக தூங்­காமல் இருந்தால் உடல் பரு­ம­ன­டையும். அதிலும் ஒரு­வ­ருக்கு குறைந்­தது 7 – -8 மணி­நேர தூக்­க­மா­னது மிகவும் அவ­சியம். இதை மெல்லியதாக இருப்­ப­வர்கள் சரி­யாக கடைப்­பி­டிப்­பார்கள். எனவே தான் அவர்கள் ஆரோக்­கி­யா­க­மா­கவும், மெல்லியதாகவும் இருக்­கி­றா ர்கள்.

இடையிடையேயான உணவு

மெல்லியதாக இருப்­ப­வர்கள் ஒரே நேரத்தில் தான் அதிகம் சாப்­பி­ட­மாட்­டார்கள். ஆனால் இரண்டு மணி­நே­ரத்­திற்கு ஒரு முறை ஏதேனும் சாப்­பி­டு­வார்கள். இப்­படி போதிய இடை­வெ­ளி­விட்டு சாப்­பி­டு­வதால், செரி­மான மண்­டலம் சீராக இயங்கி, கொழுப்­புக்கள் தங்­கு­வதைத் தடுக்­கி­றது.

அன்­றாடம் உடற்­ப­யிற்சி

உடல் எடையை குறைக்க தான் ஜிம் செல்ல வேண்டும் என்­ப­தில்லை. உடலை ஆரோக்­கி­யமாக வைத்துக் கொள்­ளவும் ஜிம் செல்­லலாம் என்ற கருத்தை மனதில் கொண்டு மெல்லியதாக இருப்­ப­வர்கள் அன்­றாடம் 1/2 முதல் 1 மணி­நேரம் ஜிம் மில் நேரத்தை செல­வ­ழிப்­பார்கள்.

உண­வை தவிர்க்­க­மாட்­டார்கள்

மெல்லியதாக இருப்­ப­வர்கள் எந்த சூழ்­நி­லை­யிலும் உணவுகளை தவிர்க்க மாட் டார்கள். சீரான இடைவெளியில் சரியான நேரத்தில் உணவுகளை மறக்காமல் சாப்பி டுவார்கள்.

இனிப்புக்களை அளவாக சாப்பிடுவார்கள் ஒல்லிக்குச்சி போன்று இருப்பவர்களுக்கு மனக்கட்டுப்பாடு அதிகம் இருக்கும். எனவே இவர்கள் முன்பு எவ்வளவு சுவை யான இனிப்புக்களை வைத்தாலும், அளவாக தான் சுவைப்பார்கள்

SHARE