இணக்க நிர்வாகத்திற்காக, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

100

 

இணக்க நிர்வாகத்திற்காக, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

அலரிமாளிகையில் இன்று முற்பகல் ஆற்றிய விஷேட உரையின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, ஜனவரி 8 ஆம் திகதி ஏற்பட்ட புரட்சியை உறுதிப்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நான் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தேன்.

நல்லாட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என நாங்கள்  அவரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

இணக்க அரசியலை ஏற்படுத்தும் நோக்கிலே நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம்.

நாட்டு மக்களின் பிரச்சினையை அவதானித்து, அந்த பிரச்சினைக்கு தீர்வு பெற்று கொடுக்க நாடாளுமன்றில் அனைவரையும் இணைத்து கொள்ள வேண்டும்.

அந்த நிலைப்பாட்டில் இருந்து தாங்கள் விலக போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE