ஆத்திரமுற்ற பெண், கான்ஸ்டபிளின் பல் உடையும் வகையில் தாக்கியுள்ளார்.

595

பாலியல் தொல்லை கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தரின் பல் உடையும் வகையில் பெண் ஒருவர் தாக்கியுள்ளார்.

கல்கிஸ்ஸை கடற்கரையோர பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விருந்துபசாரம் ஒன்றில் பங்கேற்ற பெண் ஒருவரை, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

குறித்த பெண்ணிடம் தகாத முறையில் பொலிஸ் கான்ஸ்டபிள் நடந்து கொள்ள முயற்சித்த போது அந்தப் பெண், கான்ஸ்டபிளின் பல் உடையும் வகையில் அடித்துள்ளார்.

கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிளே அடி வாங்கியுள்ளார்.

அண்மையில் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய அதிகாரிகளும், நீதிமன்ற அதிகாரிகளும் ஹோட்டல் ஒன்றில் விருந்துபசாரம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

அதிக மதுபோதையில் இருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றுக்கு சென்று அங்கிருந்த பெண் ஒருவருடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்துள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற பெண், கான்ஸ்டபிளின் பல் உடையும் வகையில் தாக்கியுள்ளார்.

 

 

 

SHARE