இதுவரை வெளிவராத மற்றுமோர் போர்க்குற்ற ஆதாரம்! மேலும் படுகொலை படங்கள் இணைப்பு

405

 

 

வன்னியில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கான பல ஆதாரங்கள் புகைப்படங்களாகவும், காணொளியாகவும் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், மேலும் புகைப்படங்கள் இலங்கை இராணுவத்தினரின் போர்க்குற்றத்தினை நிரூபிக்கும் முகமாக வெளிவந்திருக்கின்றன.

கடந்த ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் படுகொலைசெய்யப்பட்டிருந்ததும், சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் சுட்டுக்கொல்லப்பட்டதுமான செய்திகள் ஏற்கனவே வெளிவந்திருந்தது.

ஆனால் அண்மைக் காலமாக அந்தக் கொடூரங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பதற்கான பல ஆதாரங்கள் புகைப்படங்களாகவும், காணொளியாகவும் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மேலும் புகைப்படங்கள் இலங்கை இராணுவத்தினரின் போர்க்குற்றத்தினை நிரூபிக்கும் முகமாக வெளிவந்திருக்கின்றன.

நேற்று முன்நாள் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான கொடூர இனப்படுகொலையை பார்த்து அதிர்ச்சியில் இருந்து மீளாது இருக்கும் உலகத் தமிழர்களுக்கு இவை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

ஒரு போராளியை கயிற்றால் கையை கட்டி கழுத்திலும் அதை இறுகக்கட்டிய நிலையில் இறந்து காணப்படுகிறார். மற்றுமொரு போராளி உடல் முழுவதும் எரிகாயங்களுடன் காணப்படுகிறார்.
எவர் என்றே தெரியாத நிலையில் இருவரது தலைகள் மட்டும் மணலின் மேல் பகுதியில் தெரியும்வண்ணம் புதைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னுமோர் புகைப்படம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமன்றி, தமிழீழ மக்களாலும் அதிகமாக நேசிக்கப்பட்டவரும், தமிழீழ ஊடகவியலாளரும், தமிழீழத்தின் சிறந்த கலைஞருமான அருட்பிரகாசம் சோபனா எனும் இயற்பெயர் கொண்ட இசைப்பிரியா அவர்களும் ஏனைய சில இளைஞர்களும் சுட்டுக்கொல்லப்பட்டு கிடக்கும் காட்சிகள்.

இவை எல்லாவற்றையும் பார்த்து தமிழ்மக்கள் கொதித்துப் போய் என்னசெய்வதென்று தெரியாதும், இன்னும் இதுபோன்று எத்தனை வெளிவராமல் உள்ளதோ என்ற ஏக்கத்தோடும் உள்ளனர் என்பது கண்கூடு.

மஹிந்த ராஜபக்ஷ லண்டனில் உள்ள இந்தவேளையில் லண்டன்வாழ் தமிழர்கள் தமது உள்ளக்கொதிப்பை வெளிக்காட்ட இதுவே நல்ல தருணம் என்பதோடு இப்புகைப் படங்களையும், சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான காணொளியையும் ஆதாரம் காட்டி மகிந்தவின் ஆட்சியில் தான் இத்தனையும் நடந்துள்ளது எனக்கூறி அவர்மேல் சட்டநடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என பிரித்தானிய அரசையும், காவல்துறையையும் வற்புறுத்தவேண்டும்.

அத்தோடு உலகெங்கும் வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளிலுள்ள பிரித்தானிய தூதராலயங்களிற்கு சென்று இனப்படுகொலையின் சூத்திரதாரியும், போர்க்குற்றவாளியுமான மஹிந்த ராஜபக்ஷவை கைதுசெய்யும் படி வலியுறுத்தவேண்டும். இவ்வாறு ஒரே நாளில் உலகெங்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டால் அது நிச்சயம் பலம்கொடுக்கும் எதிர்காலத்தில் பலம்கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

SHARE