இது சீனாவின் ஸ்பெஷல் தம்மடிக்கும் “நாய்.

484
சீனாவில் நாய் ஒன்று தன் எஜமானரை போலவே சிகரெட் பிடிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவில் ஹெய்லோஜியாங் மாகாணத்தை சேர்ந்த லியு என்பவர் மியா (2) என்ற நாயை வளர்த்து வருகிறார்.

வியாபாரியான லியு, அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர். இவர் சிகரெட் பிடிக்கும் போதெல்லாம் அருகில் இருந்து பழகி விட்ட மியாவுக்கு சிகரெட் வாசனையில் ஈர்ப்பு ஏற்பட்டது.

அதனால், லியு சிகரெட்டை பற்ற வைத்ததும் மியா எங்கிருந்தாலும் ஓடி வந்து விடும். இதை கவனித்த லியு, ஒரு சிகரெட்டை மியா வாயில் வைத்து பற்றவைத்தார்.

நாளடைவில் மியாவும் தனது எஜமானரை போலவே சிகரெட் பிடிக்க பழகி விட்டது.

இப்போது மியா தூங்க செல்வதற்கு முன் கண்டிப்பாக ஒரு சிகரெட் கொடுத்தாக வேண்டும், இல்லாவிட்டால், அதற்கு தூக்கம் வராமல் குட்டி போட்ட பூனை போல் சுத்தி, சுத்தி வரும் என்று லியு கூறியுள்ளார்.

SHARE