இந்தியாவிடம் 168 இந்திய மீனவர்கள் கையளிப்பு…

326

இலங்கை கடற்படை அதிகாரிகளால் நேற்று 168 இந்திய மீனவர்கள் இந்திய கரையோரப் பாதுகாப்பு துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்திய இலங்கை கடல் எல்லைப்பகுதியில் வைத்தே இந்த கைமாற்றல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக இந்தியா டுடே செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

குறித்த மீனவர்கள் இந்தியாவின் கரையோரப் பாதுகாப்பு கப்பலான ‘ராணி அபக்கா’வின் மூலமான அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை. 51 படகுகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் மற்றும் இருதரப்பு உறவுகள் பற்றி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் குறித்த மீனவர்களை விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையே எதிர்வரும் 24 ஆம் திகதி பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசாங்கம், இந்திய மத்திய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

SHARE