இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல்- இறுதி நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி,

167

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் அவர் வீட்டிலிருந்து ராணுவ வாகனத்தில் ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன் நகரின் முக்கிய தெருக்கள் வழியாக வந்து ராமேஸ்வரம் தீவின் தங்கச்சிமடத்தில் உள்ள பேய்க்கரும்பு என்னும் இடத்தில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முப்படை வீரர்களும் அணிவகுத்துச் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

24-abdul-kalam65-30024-abdul-kalam65-300

இன்றைய இறுதி நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன், வெங்கய்ய நாயுடு, மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தமிழக ஆளுநர் ரோசய்யா, கேரள மாநில ஆளுநர் சதாசிவம், கேரள முதல்வர் உம்மன் சாண்டி, முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரவு, தமிழக அரசியல் கட்சித் தலைவர்களான திருமாளவன், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, கட்சியின் மாநில துணைத் தலைவர் நாகராஜ், சு.குப்புராமு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், முன்னாள் அமைச்சர் குலாம்நபி ஆசாத், ராமாநாதபுர மக்கள் தலைவர்கள் அன்வர் ராஜா, ஜவாகிர் உல்லா, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கலாமுடம் பணிபுரிந்த நண்பர்கள், குடும்பத்தினர், கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் உள்ளிட்ட பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, சுந்தர்ராஜன், உதயகுமார், உள்ளிட்ட அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர். இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்ட பிறகு முப்படை வீரர்கள் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக ஊர்வலம் வந்த பாதை முழுவதும் ஏராளமான பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையாக காத்திருந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

SHARE