இந்தியாவின் மோசமான பீல்டிங்., அதிரடி கட்டிய, கிரீன், மேத்யூ வேட்! 4 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி

16

 

பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் செவ்வாய்கிழமை நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரின் அற்புதமான அரைசதங்கள் மற்றும் சூர்யகுமார் யாதவின் முக்கிய ஆட்டத்தால் இந்தியா 20 ஓவரில் 208/6 ஓட்டங்களை எடுத்தது.

முதல் 6 ஓவர்களிலேயே ரோஹித் மற்றும் கோஹ்லியின் விக்கெட்டுகளை இந்தியா இழந்த நிலையில், ஹர்திக் 30 பந்துகளில் 71 ஓட்டங்கள் குவித்தார், கேஎல் ராகுல் 35 பந்துகளில் 55 ஓட்டங்களும், சூர்யகுமார் 25 பந்தில் 46 ஓட்டங்களும் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்களில் நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் 3 (30) விக்கெட்டுகளை எடுத்தார்.

209 ஓட்டங்கள் எனும் பெரிய இலக்கை துரத்திய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிரடியாக அமைந்தது. ஆரோன் பின்ச் – கேமரூன் கிரீன் இணை மிரட்டலாக தொடங்கினர்.

கிரீன் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தார். அப்படி சொல்வதைவிட, இந்தியாவின் மோசமான பீல்டிங் அவருக்கான வாய்ப்பை அதிகரித்தது. இந்திய வீரர்கள் அடுத்தடுத்த அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட அதை சரியாக பயன்படுத்தி, அரைசதம் கடந்தார் கிரீன் . அவருக்கு ஸ்மித் பக்கபலமாக அமைய, அவுஸ்திரேலியாவின் ரன் ரேட் ஓவருக்கு 10 என்பதை தாண்டிச் சென்றது.

இருப்பினும், 11-வது மற்றும் 15-வது ஓவருக்கு இடையில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா மீண்டும் கையில் எடுக்க முயன்றது

இறுதியில், அவுஸ்திரேலியாவுக்கு கடைசி 18 பந்துகளில் இன்னும் 40 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஆனால், ஆட்டத்தை அப்படியே தன பக்கம் திருப்பிய மேத்யூ வேட் (21 பந்துகளில் 45 ஓட்டங்கள்) அனல் பறக்க விளையாடி அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியை தேடித்தந்தார்.

இந்திய ஆதரப்பில் அக்சர் படேல் சிறந்த பந்துவீச்சாளராக 3 (17) விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தார். உமேஷ் 2 விக்கெட், சஹால் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

SHARE