இந்தியாவின் 66 ஆவது குடியரசு தினம் தின நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம், நல்லூர் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர் சி.நடராசா இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையையும் நிகழ்த்தினார். இந்திய பிரஜைகள் மற்றும் இலங்கை பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.