இந்தியாவில் 5G சேவை: டேட்டாக்களின் விலை மிக குறைவு: மத்திய அமைச்சர் அறிவிப்பு

75

 

5ஜி தொழிநுட்ப சேவைகளுக்காக காத்து இருக்கும் இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக, இந்தியாவில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் முதல் 5ஜி இணைய சேவைகள் தொடங்கும் என தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தெரிவித்தார்.

இந்த புதிய சேவை அறிமுகத்தால் இந்தியாவில் டேட்டாகளின் விலை பிற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கும், மேலும் 5ஜி சேவைகளை வரிசைப்படுத்துதல் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொடங்கும் என்றும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தேவையற்ற அழைப்புகளின் சிக்கல்களை தீர்க்க மிக முக்கியமான ஒழுங்குமுறையை உருவாக்கி வருவதாகவும், அதற்கான புதிய சட்டம் வடிவமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் புதிய 5ஜி சேவைகள் 20-25 நகரங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதுத் தொடர்பாக ஜூன் 14ம் திகதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மொத்தம் 9 அலைக்கற்றைகளை ஏலம் விட அரசு திட்டமிட்டு இருக்கும் நிலையில், 5ஜி அலைக்கற்றை ஏலம் அடுத்த மாதம் தொடங்கும் என தகவல் வெளிவந்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: வெற்றிகரமாக ஏவப்பட்ட விண்வெளி ராக்கெட்: உற்சாகத்தில் தென் கொரியா

இந்த ஏலம் 20 ஆண்டுகளுக்கு நடைபெறும் என்றும், இதில் 600, 700, 800, 1,800, 2,100, 2,300 மற்றும் 2,500 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகள் ஏலம் விடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE