இந்தியாவுடன் மோதும் இலங்கை அணி அறிவிப்பு: மீண்டும் நட்சத்திர வீரர்கள்

250

இந்திய அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் 15 வீரர்கள் கொண்ட குழு வெளியிடப்பட்டுள்ளது.

டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமாலுக்கு உடல்நலக்குறைவு காரணமாக அணியை ரங்கன ஹேரத் வழிநடத்தவுள்ளார்.

சந்திமாலுக்கு பதிலாக தனஞ்சயடி சில்வா அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் மாலிந்த புஸ்பகுமார, நுவான் பிரதீப் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

இந்த குழுவில் உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், அசேல குணவர்தன, நிரோஷன் திக்வெல், தனஞ்சயடி சில்வா மற்றும் தனுஸ்க குணதிலக்க என 8 துடுப்பாட்ட வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

தலைவர் ரங்கன ஹேரத்திற்கு மேலதிகமாக தில்ரூவான் பெரேரா மற்றும் மாலிந்த புஸ்பகுமார ஆகியோர் சுழற்பந்து வீச்சளர்களாக குழுவில் இடம்பிடித்துள்ளனர்.

சுரங்க லக்மால், நுவான் பிரதீப், லஹிரு குமார மற்றும் விஸ்வ பெர்ணான்டோ ஆகியோர் வேகப்பந்து வீச்சளர்களாக அணியில் இணைந்து கொண்டுள்ளனர்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ம் திகதி காலி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

SHARE