இந்தியாவை குறி வைக்கும் கூகிள்

518
அன்ரொயிட் இயங்குதள மென்பொருளை உருவாக்கிய கூகுள் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த மூன்று ஸ்மாட்போன் நிறுவனங்களுடன் கைகோர்த்திருக்கிறது.Android One என்ற திட்டத்தின் கீழ் மைக்ரோ-மக்ஸ், கார்பன், ஸ்பைஸ் ஆகிய நிறுவனங்கள் கூகிளுடன் இணைந்துள்ளன. இந்தியாவில் சுமார் 100 டொலர்கள் பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை உருவாக்குவது இவற்றின் நோக்கமாகும்.

புதிய கையடக்கத் தொலைபேசிகள் விலையில் குறைந்தவையாக இருப்பதுடன், அவற்றில் மென்பொருள் சார்ந்த பிரச்சனைகளும் இருக்காதென கூகிள் மேலதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

சமீபத்தில் அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் நடைபெற்ற மாநாட்டில் கூகிள் நிறுவனத்தின் இந்திய ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்கள் வெளியாகின.

SHARE