இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

333
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோர் பி.சி.சி.ஐ. ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டனர். இந்த குழுவில் டிராவிட் பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெயர் இடம்பெறாதது ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் அதிருப்தி தெரிவித்தனர்.

ஆனால், டிராவிட்டுக்கு பெரிய பொறுப்பு காத்திருப்பதாகவும், முன்னாள் வீரர்களின் தகுதிக்கு ஏற்ப அவர்களின் சேவையை பயன்படுத்திக்கொள்ள பி.சி.சி.ஐ. விரும்புவதாகவும் செயலாளர் அனுராக் தாகூர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் இன்று தெரிவித்தார். மேலும் 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அணியின் பயிற்சியாளராகவும் அவர் செயல்படுவார் என அறிவித்துள்ளார்

SHARE