இந்தியா : பாகிஸ்தான் போட்டி ரிசர்வ் நாளுக்கு மாற்றம்

27

 

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டி மழை காரணமாக நாளைய தினத்திற்கு( Reserve day) மாற்றப்பட்டுள்ளது.

முதலில் துடுபெடுத்தாடிய இந்திய அணி மழைக்கு முன்னதாக 24.1 ஓவர்கள் நிறைவில், 2 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து
நாளை (11) பிற்பகல் 3.00 மணிக்கு மீண்டும் போட்டி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடைநிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து(24.1 ஓவர்) நாளை போட்டி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE