இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?: வங்கதேசத்துடன் நாளை மோதல்

485

ரெய்னா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்காள தேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், நேற்று நடந்த 2 வது ஆட்டத்தில் 47 ரன்னிலும் இந்தியா வெற்றி பெற்றது.

இதன் மூலம் தொடரை 2–0 என்ற கணக்கில் வென்றது.

இந்தியா– வங்காளதேச அணிகள் மோதும் 3–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது இதில் இந்தியா வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிது.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்டூவர்ட் பின்னி 4 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் கும்ப்ளே சாதனையை முறியடித்தார்.

SHARE