இந்திய அணிக்கு நெருக்கடி: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து முரளிவிஜய் விலகல்

154
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளிவிஜய் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, வரும் 12ம் திகதி காலேவில் தொடங்குகிறது.இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர் முரளிவிஜய், தொடையில் தசைபிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவர் குணமடைந்து விடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரது காயம் இன்னும் குணமடையாததால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முரளிவிஜய் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாததால் இந்திய அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

SHARE