இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

343
ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.தற்போது நடைபெற்று வரும் 8வது ஐபிஎல் தொடர் வரும் மே 24ல் முடிகிறது.

இதன் பின்னர் இந்திய அணி வங்கதேசம் சென்று 1 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடுகிறது. இது யூன் மூன்றாவது வாரத்தில் முடியும்.

இதைத் தொடர்ந்து 3 ஒருநாள் மற்றும் 2 `டி20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, இந்திய அணி ஜிம்பாப்வே செல்கிறது.

இந்த தொடரானது இரு நாடுகள் செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் நடக்கவுள்ளது. இது இன்னும் முறைப்படி அறிவிக்கப்படவில்லை.

போட்டிகள் நடக்கும் நேரம், இடம் இன்னும் முடிவாகவில்லை. எனினும், யூலை முதல் வாரத்தில் இத்தொடர் தொடங்கலாம்.

மேலும் அக்டோபர் மாதம் தென் ஆப்பிரிக்காவுடன் 5 ஒருநாள், 2 `டி20’ மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா பங்கேற்கிறது.

இதன் பின், யு.ஏ.இ.,யில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

இதனிடையே, கடந்த ஆண்டு தொடரை பாதியில் ரத்து செய்து விட்டு திரும்பிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு (பி.சி.சி.ஐ.,) ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட, மறுபடியும் இந்தியா வர விரும்புவதாக தெரிவித்தது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பி.சி.சி.ஐ., மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

SHARE