இந்திய அமைதிப் படையினரின் தூபிக்கு மரியாதை செலுத்திய முதல் பிரதமர் மோடி

337

 

இலங்கையில் உயிர்நீத்த இந்திய அமைதிப் படையினரின் தூபிக்கு இன்று மாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

இதன்படி இந்த மரியாதையை செலுத்திய முதல் இந்திய அரசாங்க தலைவராக மோடி கருதப்படுகிறார்.

2008ஆம் ஆண்டில் சார்க் மாநாட்டுக்காக இலங்கை வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், இந்த தூபிக்கு விஜயம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இராணுவ முறைப்படி மோடி, சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் தூபிக்கு சென்று மலர்மாலை வைத்து வணக்கம் தெரிவித்தார். பின்னர் அமைதியான நின்று உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

1987ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் கொல்லப்பட்ட 1200 இந்திய படையினரை நினைவுகூரும் வகையில் இந்த தூபி அமைக்கப்பட்டுள்ளது.

 

SHARE