இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்! முன்னாள் வீரர் கூறிய விடயம்

485

 

ரோஹித் சர்மாவுக்கு பிறகு சுப்மன் கில் இந்திய அணியின் அடுத்த தலைவராக இருப்பார் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, எதிர்காலத்தில் ஆடவர் தேசிய அணியின் தலைவராக யார் இருப்பார் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா, ரிஷாப் பண்ட் அல்லது ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரில் ஒருவரை இந்திய அணியின் தலைவராக ரெய்னா தெரிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சுரேஷ் ரெய்னாவின் தெரிவு சுப்மன் கில் என தெரிய வந்துள்ளது. ரோஹித் சர்மாவுக்கு பிறகு அவர் தான் (கில்) இந்திய அணியின் தலைவர் என்று நான் கூறுவேன் என ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல அணிக்கு உதவ விரும்புவதாக ரோஹித் சர்மா சமீபத்தில் தனது ஆவலை வெளிப்படுத்தினார்.

கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு சீசனில் 8 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE