இந்திய கேப்டனுக்கு நடந்த அவமரியாதை? வெடித்த சர்ச்சை!

18

 

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஆளுநரால் அவமரியாதை செய்யப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

ஆசியாவின் பிரபலமான டுராண்ட் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது.

இதன்மூலம் சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதனைத் தொடர்ந்து வெற்றிக் கோப்பையை வழங்கும்போது புகைப்படம் எடுக்கப்பட்டது.

அப்போது தான் புகைப்படத்தில் நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக, மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் கேப்டன் சுனில் சேத்ரியை கையை வைத்து தள்ளினார். இதனால் கோப்பையை இரு கைகளால் பெற முடியாமல் சுனில் சேத்ரி தடுமாறினார்.

இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி விளையாட்டு வீரரை இப்படியா ஒதுக்கி வைப்பது என ஆளுநரை பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

SHARE