இந்திய நாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி

413
 

இந்திய நாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசியக் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

நாடு முழுவதும் 68வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் டெல்லியில் இன்று (15.08.14) காலை காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் தலைப்பாகை அணிந்த உடையுடன் டெல்லி செங்கோட்டை சென்றடைந்தார். அங்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றார்.

இதனைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார. பின்னர் நாட்டு மக்களுக்கு நரேந்திர மோடி உரையாற்றினார். வழக்கமாக தயாரிக்கப்பட்ட உரையை வாசிக்காமல் குறிப்புகளை வைத்துக் கொண்டு மோடி உரையாற்றினார். அதேபோல் புல்லட் புரூப் அணியாமலும் மோடி உரையாற்றினார்.

சுதந்திர தின விழாவையொட்டி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. டெல்லி செங்கோட்டை வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தன. அத்துமீறி பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இன்றைய விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லோதா மற்றும் மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தூய்மையான இந்தியாவை உருவாக்க உறுதி கொள்வோம்: குடியரசுத் தலைவர்

“நம் நாட்டின் ஒவ்வொரு நதியும், ஒவ்வொரு அருவியும், காற்றின் ஒவ்வொரு துகளும் சுத்தமாக வைத்துக்கொள்ளப்பட வேண்டும். நாம் சிறிதளவு கவனம் செலுத்தி உழைக்க வேண்டும். இயற்கையை நாம் பேணிக்காத்தல், இயற்கை எப்போதும் நம்மைப் பேணிக்காத்துக் கொண்டே இருக்கும்” என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

ஜனநாயகச் சமதர்மம், மதநல்லிணக்கம் இவற்றின் கலங்கரை விளக்கமாக இந்தியா திகழ்கிறது. சமயச்சார்பின்மை என்ற கட்டிடத்தைநாம் உறுதியாகக் காத்து நிற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





15 Aug 2014
SHARE