இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காக ஒபாமா காத்திருக்கிறார்!!

518

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை, ஒபாமாவின் அரசு நிர்வாகம் எதிர்நோக்கி காத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் இஸ்லாமியர்கள் மீதான இனப்படுகொலையைக் காரணமாக முன்வைத்து மோடிக்கு அமெரிக்க அரசு விசா அனுமதி வழங்க மறுத்துவந்தது. அதே வேளை அமெரிக்க அரசை நடத்தும் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களும், ஆப்கோ போன்ற அமெரிக்க ஆலோசனை நிறுவனங்களும் மோடியைப் பிரதமராக்குவதற்கான திட்டமிட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டன. மோடியை உருவாக்கிய அமெரிக்கா அவருக்கு எதிராக ஆம் ஆத்மி போன்ற கட்சிகளையும் உருவாக்கியது. இதனூடாக இந்தியா முழுவதையும் தனது மேலதிக்கத்தின் கீழ் கொண்டுவந்துள்ளது.மோடி பிரதமரானதும் அமெரிக்காவின் விசா நாடகம் முடிவிற்கு வந்துள்ளது.

உலகம் முழுவதும் இனக்கொலையாளிகளையும் பாசிஸ்டுக்களையும் தோற்றுவிக்கும் அமெரிக்காவின் புதிய வழிமுறையினூடாக முதலில் தோற்றுவிக்கப்பட்டவர் ராஜபக்ச. இன்று ராஜபக்சவையும் அவரின் எதிரிகளையும் தனது கட்டுப்பாட்டி வைத்து ஆட்டுவிக்கிறது அமெரிக அரசு

இந்தியாவில் புதிய அரசு அமைந்ததையடுத்து, இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி இன்று அமெரிக்காவுக்கான இந்திய உயர் தூதர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார் என ஜோன் கேர்ரி கூறினார்.
இது வெறும் ஆரம்பம் மட்டுமே, இந்தியாவை மத்தியகிழக்காக மாற்றும் அவலத்தை மோடியும் அமெரிக்காவும் இணைந்து நிறைவேற்றும்.

இந்தியாவில் அமைந்துள்ள புதிய ஆட்சிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் வாழ்த்து தெரிவித்த ஜான் கெர்ரி, நரேந்திர மோடியை அமெரிக்காவுக்கு வரவேற்பதை அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமாவின் அரசு நிர்வாகம் எதிர்நோக்கி காத்திருப்பதாக குறிப்பிட்டார்.

SHARE