
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனே ஹெராத், இந்திய வீரர் ரவிச் சந்திரன் அஸ்வினை பின்னுக்கு தள்ளி ஐசிசி தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஜிம்பாப்வே அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் இரு அணிகள் மோதிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இப்போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கனே ஹெராத் 249 ஓட்டங்கள் விட்டு கொடுத்து 11 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதன் மூலம் ஐசிசி தரவரிசைப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த அஸ்வினை பின்னுக்கு தள்ளி, ஹெராத் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.முதல் இடத்தில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா உள்ளார்.